search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சளாறு அணை"

    மஞ்சளாறு அணை 53 அடியை எட்டியுள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #ManjalarDam
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. 57 அடி முழு கொள்ளளவு கொண்ட மஞ்சளாறு அணை மூலம் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதியில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது.

    தற்போது கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து 130 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 47 அடியாக இருந்த நீர்மட்டம் வேகமாக உயர்ந்து இன்று காலை 53 அடியை எட்டியுள்ளது.

    இதனால் மஞ்சளாற்றில் கரையோரம் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 55 அடியை எட்டியவுடன் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 24-ந் தேதி அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ManjalarDam

    ×